நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பரவும் மர்ம காய்ச்சல் : மூவர் மரணம்

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடந்த சில தினங்களாக திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டு மர்ம காய்ச்சல் நோய் பரவி வருகிறது. மர்மகாய்ச்சல் நோயில் காட்டுமன்னார்கோயில் அருகே

News image
Updated On :17 பிப்ரவரி 2014, 1:38 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடந்த சில தினங்களாக திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டு மர்ம காய்ச்சல் நோய் பரவி வருகிறது. மர்மகாய்ச்சல் நோயில் காட்டுமன்னார்கோயில் அருகே மூவர் மரணமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் மர்ம காய்ச்சல் நோயால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக் கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சிதம்பரம் நகரில் சிறுகுழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த காய்ச்சல் நோய் பரவி வருவதால் தனியார் மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் நோய் ஏற்பட்டால், அந்த காய்ச்சல் அனைவருக்கும் பரவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வானிலை மாற்றத்தாலும், இரவு நேரங்களில் சில்லென்று வீசும் பணிக்காற்றினாலும் இந்த மர்ம காய்ச்சல் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் ஆறு, வாய்க்கால்களில் போதிய நீரின்றி காய்ந்து போனதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்த, தற்போது எடுக்கப்படும் வண்டல் மற்றும் உப்பு குடிநீரினால் மர்ம காய்ச்சல் ஏற்படுவதாக ஒரு பகுதியினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழக்கடம்பூரில் மணிமாறன் மகள் கிருத்திகா (2), சுப்பிரமணியன் மகள் மஞ்சுளா (23), கோவிந்தசாமி (75) ஆகியோர் மர்ம காய்ச்சலில் இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் நடமாடும் மருத்துவக்குழுக்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு தக்க சிகிச்சை அளிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.