நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் நகராட்சியில் ரூ.3.50 கோடி சொத்துவரி பாக்கி!  குடிநீர் இணைப்பை துண்டித்து வசூல்

சிதம்பரம் நகராட்சியில் சொத்துவரி ரூ.3.50 கோடியும்,  குடிநீர் வரி ரூ.80 லட்சமும் பாக்கி உள்ளது. வரி கட்டுமாறு ஆட்டோ மூலம் நகரில் அறிவிப்பு செய்யப்பட்டு வரு கிறது. இந்நிலையில் வரி செலுத்தாத

News image
Updated On :18 பிப்ரவரி 2014, 12:40 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி பாக்கியை, குடிநீர் மற்றும் புதைவடிகால் இணைப்புகளை துண்டித்து வரி வசூலிக்கும் பணியில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிதம்பரம் நகராட்சியில் சொத்துவரி ரூ.3.50 கோடியும்,  குடிநீர் வரி ரூ.80 லட்சமும் பாக்கி உள்ளது. வரி கட்டுமாறு ஆட்டோ மூலம் நகரில் அறிவிப்பு செய்யப்பட்டு வரு கிறது. இந்நிலையில் வரி செலுத்தாத வீடுகளை கண்டறிந்து குடிநீர் இணைப்பு, புதைவடிகால் இணைப்பு துண்டிப்பு  மற்றும் ஜப்தி நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  சிதம்பரம் கொத்தங்குடித்தெருவில் குடிநீர் வரி செலுத்தாத ஒருவரின் வீட்டு குடிநீர் இணைப்பினை செவ்வாய்க்கிழமை நகராட்சி மின்கண்காணிப்பாளர் ஏ.ஷேக்மைதீன், வருவாய் ஆய்வாளர் எஸ்.சரவணக்குமார் மற்றும் உதவியாளர்கள் துண்டித்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்,.செல்வராஜ் தெரிவித்தது: வரி பாக்கியுள்ளவர்கள் விரைவில் வரித்தொகையை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்.  நடப்பு ஆண்டில் வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் வரி செலுத்தாவிடில் நிரந்திர ஜப்தி நடவடிக்கை தொடரும் என ஆர்.செல்வராஜ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.