மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கூலித்தொழிலாளி கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

Updated On :20 பிப்ரவரி 2014, 1:45 pm

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
செங்கோட்டை அருகே உள்ள வல்லம் இந்திரா காலனியைச் சேர்ந்த பெருமாள் மகன் மகேஷ் (27). கூலித்தொழிலாளி. அதே ஊரின் கலைஞர் காலனியைச் சேர்ந்த முருகையா மகன் குமார் என்ற செந்தில்குமார் (28). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் உண்டாம்.
26-6-2009 அன்று இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதாம்.

இதில் ஆத்திரமடைந்த குமார், அரிவாளால் மகேஷை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மகேஷ் இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நசீர்அகமது, குற்றஞ்சாட்டப்பட்ட குமாருக்கு ஆயுள்சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில், மாவட்ட அரசு குற்றவியல் துறை வழக்குரைஞர் என்.சிவலிங்கமுத்து ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.