விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வெள்ளக்கிழமை தொடங்கி, தொடர்ந்து பிப்.28-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
தமிழகம் முழுவதும் 10-வது வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து ஏப்.9ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், விருதுநகர் கல்வி மாவட்டத்தில்- 10876 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில்-9928, அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில்-9346 என மொத்தம் 30150 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுத இருக்கிறார்கள்.
இந்நிலையில் அறிவியல் பாட செய்முறை தேர்வு வெள்ளியன்று தொடங்கி, தொடர்ந்து குறிப்பிட்ட நாள் வரையில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்பட இருக்கிறது. இப்பணிக்காக வெவ்வேறு பள்ளிகளில் இருந்து மேற்பார்வையாளராக ஆசிரியர்களை நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
அதற்கு முன்னதாக ஒவ்வொரு பள்ளியிலும் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு ஆசிரியர்கள் மூலம் தொடர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வாசிப்பு மற்றும் படிப்பில் பின் தங்கிய மாணவ, மாணவிகளை கண்டறிந்து ஒவ்வொரு பாடத்திலும் குறிப்பிட்ட மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் அளவிற்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதோடு, உடனே திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி பெறும் திறமைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


