அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பேரிடரில் பாதிக்காத வகையில் கூடங்குளம்  அணு உலை : இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர்

சுனாமி, இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதிக்காத வகையில் கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் அணு உலை  அமைக்கப்பட்டுள்ளதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.

News image
Updated On :20 பிப்ரவரி 2014, 12:30 pm

சுனாமி, இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதிக்காத வகையில் கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் அணு உலை  அமைக்கப்பட்டுள்ளதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.

    விருதுநகர் கேவிஎஸ் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளிடையே அணு உலை குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக வந்த கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் எஸ்.எஸ்.சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

     கூடங்குளம் அணு உலை கடல் மட்டத்திலிருந்து 25 அடி உயரம் பாதுகாப்பான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுனாமி, புயல் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களிலும் எக்காரணம் கொண்டும் பாதிக்காது. அப்படியே பேரிடர் தாக்கினாலும் 3 நொடிகளில் அனைத்து இயந்திர பிரிவுகளும் நின்று விடும் அளவிற்கு மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த அணு உலை மூலம் 69 கோடி யூனிட் மின்சாரம், 680 மெகவாட் அளவிற்கு தயார் செய்யப்பட்டுள்ளது.

     இன்னும் ஒரு மாதத்தில் முதல் உலையிலிருந்து மின்சாரம் தயார் செய்வது 100 சதவீதம் இலக்கை எட்டும் என கருதப்படுகிறது. மேலும், புவிஈர்ப்பு விசை, காற்று மூலம் அணு உலையை புதுப்பிக்கும் சோதனை மூலம் வெற்றி கண்டுள்ளோம்.  இதையடுத்து 2-வது அணு உலைக்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது. அதுவும், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாததிற்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்கால மின்சக்தி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரஷ்யா, பங்காளதேஷ் உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் அணு உலைகளை நிறுவி வருகின்றது. அந்த வகையில் சீனாவில் 29 புதிய அணு உலைகளை தொடங்கியுள்ளனர். அணுசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் தூய்மையான சக்தி ஆகும். இதுவரையில் அணு உலை குறித்து பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பொதுமக்களிடையே 1.50 லட்சம் பேரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.

     அதையடுத்து, செந்திக்குமார நாடார் கல்லூரி மற்றும் கேவிஎஸ் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார். இதில், பொதுமக்கள் விழிப்புணர்வு குழுத் தலைவர் எஸ்.காளிராஜன், செயலாளர் பண்டாரம் மற்றும் செந்திக்குமார நாடார் கல்லூரியின் முதல்வர் சுந்தரபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.