விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள குடிநீர் பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் ஆகியோருக்கு பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் வகையிலான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் கந்தசாமி-ராஜம்மாள் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில், குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பம்ப் ஆபரேட்டர்கள், அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிராமங்களில் குடிநீர் ஆதாரங்களில் உள்ள குடிநீர் குடிப்பதற்கு உகந்ததா என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிநீர் மாதிரிகளை அந்தந்த பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆசிரியர்களிடம் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே இவர்களுக்கு களநீர் ஆய்வு பெட்டி மற்றும் ஹைட்ரஜன் சல்பைட் கலந்த கலவை மூலம் தண்ணீர் நுன்கிருமிகளை கண்டறிய வேண்டும். அதன் பின் குடிப்பதற்கு ஏற்றதா என்பதை அறிந்து கொண்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பேரணியை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் ஆசிரியர்கள் 500 பேர் மற்றும் குடிநீர் தேக்கத்தொட்டி இயக்குநர்கள் 950 பேரும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

