டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எரிவாயு சிலிண்டர் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக  அறிவிக்கப்பட்டிரூந்த சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2014, 3:05 pm

வேல்முருகன்

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக  அறிவிக்கப்பட்டிரூந்த சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவை விதிமுறைகளை மீறும் விநியோகஸ்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட  பல புதிய விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் அறிவித்துள்ளன.  இதனை தளர்த்த கோரியும், புதிய விநியோக உரிமங்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்தும் நாளை வேலைநிறுத்தம் செய்ய அகில இந்திய எரிவாயு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு விடுத்தது.

இந்நிலையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள்-விநியோகஸ்தர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும்  மார்ச் 31-ம் தேதிக்குள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என விநியோகஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.