டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: ஷிண்டேவிற்கு எதிராக ஆர்..கே.சிங் வழக்கு தொடரலாம் என உச்ச நீதிமனறம் அறிவிப்பு

ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான விசாரணையை தடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேமீது  தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில்

News image
Updated On :24 பிப்ரவரி 2014, 11:56 am

வேல்முருகன்

ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான விசாரணையை தடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேமீது  தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று தளளுபடி செய்யப்பட்டது.

 ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான விசாரணையை தடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மீது வழக்கறிஞர் சிவக்குமார் திரிபாதி என்பவர்  உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்புடையவராகக் கருதப்பட்ட நபரை தில்லி காவல்துறையினரை விசாரிக்க விடாமல் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தடுத்ததாகவும், இது தொடர்பாக முன்னாள் உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் தகவல் தெரிவித்திருப்பதையும் மனுவில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து வழக்கு தொடரப்பட்டிருப்பதாகத் கூறி தள்ளுபடி செய்தனர்.

 அதேநேரத்தில். ஷிண்டே மீது புகார் கூறிய ஆர்.கே.சிங் வேண்டுமானால் வழக்குத் தொடரலாம் என்று கூறிய நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.