விருதுநகரில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பயனடையும் வகையில் தொழில் முதலீட்டு மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்தார்.
விருதுநகர்-மல்லாங்கிணறு சாலையில் வரலொட்டி கிராமத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு ரூ.17 கோடியில் புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி தலைமை வகித்தார்.
சென்னை கேந்திரிய வித்யாலயாவின் துணை ஆணையாளர் ஆர்.முரளி வந்திருந்தவர்களை வரவேற்புரை வழங்கினார். இதில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன், விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் புதிய கட்டடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
அதையடுத்து இவ்விழாவில் மத்திய இணை அமைச்சர் பேசியதாவது:
கல்விக்கு சிறப்பளித்த காமராஜர் பிறந்த மண்ணில் இப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த ஒரு காரியத்தையும் இறைவன் மனிதனால் செய்ய வைக்கிறான். அந்த வகையில் சிறந்த மாணவ, மாணவிகளை இந்தி, தமிழ், ஆங்கிலம் மும்மொழிகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக மாவட்டத்திற்கு ஒன்று வீதம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக காமராஜர் கல்வித் திட்டத்தையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார். இதையே மத்திய அரசு அனைவருக்கும் கல்வி திட்டமாக செயல்படுத்துவதோடு இந்தியா முழுவதிலும் 12 கோடி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு திட்டமும் அளிக்கப்படுகிறது. இதற்காக, ஆண்டுதோறும் ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டு வருகிறது.
மேலும், ரூ.100 கோடியில் விருதுநகர், சாத்தூர் சாலைப்பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டு வருவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றது. இதுதொடர்பாக முறையாக மாநிலத்தில் எந்த அதிகாரிகளை அணுகுவது என்பது தெரியவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாநில அரசும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை.
இதுபோன்ற காரணங்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது. இதேபோல், ஆந்திரம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் சிறப்பு அதிகாரியை நியமனம் செய்துள்ளனர். அதனால் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது தொடர்பாக எளிதாக கலந்தாய்வு செய்து திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது.
இந்நிலையில் சிவகாசியில் இருந்து உலக நாடுகளுக்கு வெடிகள் மற்றும் மத்தாப்புக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வகையில் 200 ஏக்கரில் சிறப்பு மண்டல வர்த்தக பிரிவு அமைக்கப்படும். அதேபோல், மத்திய, மாநில மற்றும் வர்த்தகர்களின் பங்களிப்புடன் உற்பத்தியாளர்கள்-வியாபாரிகள் ஆகியோர் பயனடையும் வகையில் ரூ.100 கோடியில் விருதுநகரில் தொழில் முதலீட்டு மையம் விரைவில் அமைக்கப்பட இருப்பதாகவும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்தார்.
இந்த விழாவில் வர்த்தக சங்கத்தின் தலைவர் வி.வி.எஸ்.யோகன், தொழில் அதிபர்கள் இதயம் முத்து, செல்வராஜன், பள்ளிக்கு உட உபயதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிறைவாக இப்பள்ளியின் முதல்வர் பிந்து நன்றி கூறினார். அதையடுத்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கேந்திரிய பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


