நெல்லை கோயில்களில் ஸ்ரீஹனுமன் ஜயந்தி வழிபாடு
திருநெல்வேலி பகுதியில் உள்ள ஸ்ரீஹனுமன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற ராஜதரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து


திருநெல்வேலி பகுதியில் உள்ள ஸ்ரீஹனுமன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற ராஜதரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஆஞ்சநேயர் அவதரித்த நாளில் ஆஞ்சநேயரை வழிபட்டால் மனபலம் பெருகும் என்பது ஐதீகம். 25 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீஹனுமன் ஜெயந்தி புத்தாண்டு நாளான புதன்கிழமை வந்ததை அடுத்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதையொட்டி திருநெல்வேலி அருகன்குளம் காட்டு ராமர் கோயில், சுத்தமல்லி ஜெயமாருதி கோயில், உடையார்பட்டி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, ஹோமம் நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு கெட்வெல் ஸ்ரீகனகமஹாலெட்சுமி ஆஞ்சநேயர் கோயிலில் செவ்வாய்க்கிழமை உலக நன்மைக்காக ஹோமம், ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம், 1008 இளநீர் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் ஆகியன நடைபெற்றன.புதன்கிழமை சிறப்பு பூஜைகள், விஷேச சகஸ்ரநாமம், சிறப்பு வழிபாடு, ராஜதரிசனம் ஆகியன நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...