பாபநாசம் தலையணையில் மூழ்கி இளைஞர் சாவு
ஆழ்வார்குறிச்சி அருகே கீழஆம்பூரை சேர்ந்த காளிமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகன் முப்புடாதி (17). 9 ஆம் வகுப்பு படித்துள்ள இவர் புதன்கிழமை தனது நண்பர்கள் இசக்கிபாண்டி, சதீஷ்,


திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தலையணையில் குளித்த இளைஞர் சூழலில் சிக்கி புதன்கிழமை இறந்தார்.
ஆழ்வார்குறிச்சி அருகே கீழஆம்பூரை சேர்ந்த காளிமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகன் முப்புடாதி (17). 9 ஆம் வகுப்பு படித்துள்ள இவர் புதன்கிழமை தனது நண்பர்கள் இசக்கிபாண்டி, சதீஷ், பொன்முத்துராமலிங்கம் ஆகியோருடன் பாபநாசம் தலையணையில் குளிக்க வந்தாராம்.தலையணையில் குளித்து கொண்டிருந்த முப்புடாதி அங்கு ஆழமான பகுதியில் சிக்கி இறந்தார். இதையடுத்து பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் தீயணைப்பு படையினர் முப்புடாதி உடலை மீ்ட்டனர். விக்கிரமசிங்கபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...