ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாஞ்சோலை சுற்றுலாச் செல்ல வனத்துறை கட்டுபாடு

மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. மாஞ்சோலை, நாலுமுக்கு, குதிரைவெட்டி,

News image
Updated On :1 ஜனவரி 2014, 1:58 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை கட்டுபாடு விதித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. மாஞ்சோலை, நாலுமுக்கு, குதிரைவெட்டி, காக்காச்சி தேயிலைத் தோட்டப் பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.

மணிமுத்தாறில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளது. களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக எல்லையில் இருக்கும் இங்கு செல்ல வனத்துறை அனுமதி பெற்று செல்ல வேண்டும்.அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலகத்தில் அனுமதி பெற்று பின்னர் மணிமுத்தாறில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அனுமதித்த பிறகு மாஞ்சோலை செல்லும் நடைமுறை இருந்து வந்தது. இதனிடையே அண்மையில் பேக்கேஜ் முறையில் மாஞ்சோலை சுற்றுலாச் செல்லும் திட்டத்தை வனத்துறை அறிமுகம் செய்தது.

புகார் எழுந்ததை அடுத்து இத்திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மாஞ்சோலை செல்ல வனத்துறை கட்டுபாடு விதித்துள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிக்கு செல்ல விரும்புவோர் அம்பாசமுத்திரத்தில் புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகத்தில் முறையான அனுமதி பெற வேண்டும். அலுவலக தினங்களில் 5 வாகனங்களும், விடுமுறை தினங்களில் 10 வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படும்.

விடுமுறை தினங்களில் மாஞ்சோலை செல்ல விரும்புவோர் அலுவலக தினங்களில் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.