தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிதம்பரம் அருகே ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை!

சிதம்பரம் அருகே உள்ள சி.அரசூர் கிராமத்தைச் சேர்ந்த ஓவியர் அரசனகுமார் மனைவி பரமேஸ்வரி (26) நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். ஆங்கில புத்தாண்டான புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு

News image
Updated On :1 ஜனவரி 2014, 12:35 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே புத்தாண்டு அதிகாலையில் 108 ஆம்புலன்ஸிலேயே ஒரு பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது.

சிதம்பரம் அருகே உள்ள சி.அரசூர் கிராமத்தைச் சேர்ந்த ஓவியர் அரசனகுமார் மனைவி பரமேஸ்வரி (26) நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். ஆங்கில புத்தாண்டான புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு பரமேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கிராமத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வெங்கடேசன், மருத்துவ உதவியாளர் பாரிதாஸ் ஆகியோர் உடனடியாக அங்கு சென்று நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது உறவினரை அழைத்துக் கொண்டு சிதம்பரம் மருத்துவமனைக்கு புறப்பட்டனர். அப்போது சி.அரசூர் அருகே சிறது தூரத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென வலி எடுத்ததால் ஆம்புலன்ஸை நிறுத்தினர். பின்னர் பரமேஸ்வரிக்கு ஆம்புலன்ஸிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடனடியாக பரமேஸ்வரிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.