கடலூர் மாவட்டத்தில் கடந்த 2013ஆம் ஆண்டில் 4,066 விபத்துகள் நடந்துள்ளது. இதில் 432 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து கூறியது: கடலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் 31ஆம் தேதி முடிய வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மாவட்டத்தில் 51 ஆயிரத்து 359 முறை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், அதிகபாரம், அதிக பயணிகளை ஏற்றுதல், படிக்கட்டில் பயணம் செய்தது, செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டியது மற்றும் வரி செலுத்தாதவர்கள், எப்.சி ஆய்வு முடிக்காமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் மீது 5,283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆய்வின் போது வரி மற்றும் அபராதமாக 2 கோடியே 78 லட்சத்து 26 ஆயிரத்து 313 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 42 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த 73 ஓட்டுனர்களில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு 3,882 விபத்துகளில் 458 பேர் இறந்துள்ளனர். 2013ஆம் ஆண்டுடில் 4,066 விபத்துகளில் 432 பேர் இறந்துள்ளனர்.
விபத்துகளைத் தடுக்க ஓட்டுநர்கள் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். பொதுமக்கள் சாலை விதிகளை மதித்து நடந்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.
மேலும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர், 5 பேருக்கு மேல் ஏற்றப்படும் ஆட்டோக்களில், குழந்தைகளை அனுப்பாமலும், பள்ளி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு அனுப்பி விபத்துகளைத் தவிர்க்க உதவ வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

