தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிதம்பரம் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு: மீட்புபணியில் ஈடுபட்ட கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ

சிதம்பரம் அருகே சாமியார்பேட்டை கடலில் வியாழக்கிழமை அதிகாலை படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் இறந்தார். மூவர் காயமுற்றனர். சம்பவ இடத்திற்கு கே.பாலகிருஷ்ணன்

News image
Updated On :2 ஜனவரி 2014, 9:45 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே சாமியார்பேட்டை கடலில் வியாழக்கிழமை அதிகாலை படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் இறந்தார். மூவர் காயமுற்றனர். சம்பவ இடத்திற்கு கே.பாலகிருஷ்ணன் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்.

சிதம்பரம் அருகே சாமியார்பேட்டை பகுதி மீனவர்கள் நடராஜன், வரதப்பிள்ளை, ஏழுமலை, ரவி ஆகிய நால்வரும் ஒரு படகில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். சுமார் 150 மீட்டர் தூரத்தில் அலையின் சீற்றத்தில் படகு கவிழ்ந்தது. இதில் நடராஜன் (55) நீரில் மூழ்கி இறந்தார். மீதமுள்ள மூவரும் காயங்களுடன் கரையேறினர்.

அப்போது சிதம்பரத்திலிருந்து அவ்வழியே சென்னை சென்று கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக சென்று மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து காயமுற்றவர்களை மீட்டு பரங்கிப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். பின்னர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பரங்கிப்பேட்டையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூவரையும் பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் இறந்த மீனவர் குடும்த்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று  அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.