தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிதம்பரம் அருகே பாலம் கட்ட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் உன்னாவிரதம்.

சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுவம்பட்டு - அம்புபூட்டியபாளையம் இடையே இணைப்பு பாலம் கட்ட வலியுறுத்தி பரங்கிபேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில்

News image
Updated On :2 ஜனவரி 2014, 12:42 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுவம்பட்டு - அம்புபூட்டியபாளையம் இடையே இணைப்பு பாலம் கட்ட வலியுறுத்தி பரங்கிபேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் சி.முட்லூர் மண்டபம் என்ற இடத்தில் உண்ணாவிரதம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி உறுப்பினர் எஸ்.அருள் தலைமை வகித்தார். மாரியப்பன், பரசுராமன், கிருஷ்ணமூர்த்தி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம்உன்னாவிரதத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

அவர் பேசியது: மக்கள் பிரச்சினைக்காக அதிகமாக போராடும் ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூ கட்சிதான்.  இப்போராட்டம் மாவட்ட நிர்வாக கவனத்தை ஈர்க்கும் போராட்டமாகும். மறுபடியும் பாலம் கட்ட முன் மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை என்றால் மக்களை திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்த்பபடும் என டி.ஆறுமுகம் தெரிவித்தார்.

பரங்கிப்பேட்டைஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம்,  மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சிதம்பரம் நகர செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், புவனகிரி ஒன்றியச் செயலாளர் சதானந்தம், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.அமர்நாத், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் காந்தி, விவசாய சங்க அமைப்பாளர் ஆர்.கருனைச்செல்வம், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சுனில் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் பா.ஜான்சிராணி பங்கேற்று நிறைவுரையாற்றினார். ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர்
சிரஞ்சிவி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.