மறுதேர்தல் வரக்கூடாது என்பதற்காகவே ஆதரவு: காங்கிரஸ்
தில்லி சட்டசபையில் ஆம் ஆத்மி அரசு மீது தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் கட்சியின் அர்விந்தர்சிங் லவ்லி சட்டசபையில்


தில்லி சட்டசபையில் ஆம் ஆத்மி அரசு மீது தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் கட்சியின் அர்விந்தர்சிங் லவ்லி சட்டசபையில் பேசியதாவது: தில்லியில், ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை பூர்த்திசெய்யவும், மறு தேர்தல் வேண்டாம் என்பதற்காவும் தான், ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.
காங்கிரஸ் மீது ஆம் ஆத்மி கட்சி, பல புகார்களை கூறி உள்ளது. அவை குறித்து இந்த அரசு விசாரணை நடத்த வேண்டும். எங்கள் மடியில் கனமில்லை. எனவே, வழியில் பயமில்லை. எந்த தவறும் நடக்கவில்லை. எனவே எந்த விதமான விசாரணையையும் நாங்கள் எதிர் கொள்ள தயார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...