பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நிறுத்திவைக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலை. 286 துணைப் பேராசிரியர்களின் ஊதியம் வழங்கப்பட்டது

பிஹெச்டி முனைவர் பட்டம் படித்த கல்வி கட்டணத்தை செலுத்தாத அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைப் பேராசிரியர்களின் 286 பேரின் டிசம்பர் ஊதியம்

News image
Updated On :3 ஜனவரி 2014, 2:59 pm

ஜி.சுந்தரராஜன்

பிஹெச்டி முனைவர் பட்டம் படித்த கல்வி கட்டணத்தை செலுத்தாத அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைப் பேராசிரியர்களின் 286 பேரின் டிசம்பர் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் துணைப் பேராசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று வெள்ளிக்கிழமை ஊதியம் வழங்கப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி (முனைவர்) பட்டப்படிப்பிற்கான கல்வி கட்டணத்தை செலுத்தாமல் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 286 துணைப் பேராசிரியர்களின் டிசம்பர் மாத ஊதியத்தை பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தி வைத்தது. பிஹெச்டி கல்வி கட்டணத்தை குறிப்பிட்ட கால வரையறைக்குள் செலுத்த வேண்டும். கல்வி கட்டணத்தை செலுத்தாத வரையில் ஊதியம் வழங்கப்பட மாட்டாது என நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதத்திடம் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் துணைப் பேராசிரியர்கள் சென்று கல்வி கட்டணத்தை குறிப்பிட்ட சில காலத்திற்குள் செலுத்துவதாக வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்ட துணைப் பேராசிரியர்களின் ஊதியம் வழங்கப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.