பிரசித்தி பெற்ற சேலம் குமரகிரி தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
35 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.
கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்ட போதிலும் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாக மலை மீது மூலவரை தரிசிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது ரூ. 2 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
யாக கால பூஜைகள் தொடங்கி நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் மூலவர் விமானம் உள்பட அனைத்து நிலை கோபுரங்களுக்கும் புனித நீருற்றி பக்தர்கள் அரோகரா கோஷங்களுக்கு இடையே குடமுழுக்கு நடத்தப்பட்டது.
இந்த விழாவில் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Summary
The consecration ceremony of the renowned Salem Kumaragiri Dandayudhapani Temple was celebrated with great grandeur.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளுக்குப் பிறகு குடியாத்தம் தொகுதியில் களம் காணும் தேமுதிக!

பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் போட்டி: வேட்பாளராக தமிழ்க்குமரன் அறிவிப்பு

வல்லக்கோட்டை கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

தஞ்சை காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


