பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரம் கூட்டுறவு விற்பனை சங்க ரேஷன் கடைகளில் தேங்காய், வெல்லம் விற்பனை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிதம்பரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் தேங்காய், வெல்லம், கடலைபருப்பு, நெய் ஆகியவை குறைந்த

News image
Updated On :5 ஜனவரி 2014, 10:11 am

ஜி.சுந்தரராஜன்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிதம்பரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் தேங்காய், வெல்லம், கடலைபருப்பு, நெய் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக முதல்வர் ஆணைக்கினங்க சிதம்பரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவர் ஏ.அருண்மொழிதேவன் பங்கேற்று 1 கிலோ பச்சரி, 1 கோலி சர்க்கரை, ரூ.100 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். விழாவிற்கு கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் பா.மில்லர் முன்னிலை வகித்தார்.

விழாவில் தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள்) எம்.பழனி, கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் வி.ராதாகிருஷ்ணன், அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சொ.ஜவகர், கடலூர் கூட்டுறவு அச்சகத் தலைவர் கே.ஆர்.ஜி.சுவாமிநாதன், டேங்க் ஆர்.சண்முகம், சி.கே.சுரேஷ்பாபு, பரங்கிப்பேட்டை ரமேஷ், கூட்டுறவு விற்பனை சங்க இயக்குநர்கள் நாகராஜன், நாராயணமூர்த்தி, ஜெயபால், முட்லூர் ஏ.டி.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிதம்பரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள ரேஷன்கடைகளில் முதல் தரமான தேங்கா.் ரூ.10-க்கும், வெல்லம் 1 கிலோ ரூ.46-க்கும், கடலைப்பருப்பு 1 கிலோ ரூ.45-த்தும். ஆவியன் நெய் 200 கிராம் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காதி பொருள்களான பொங்கல்பூஜைக்கு தேவையான சூடம், பத்தி உள்ளிட்டவையும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என விற்பனை சங்கத் தலைவர் பா.மில்லர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.