ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மார்கழி நீராட்ட உற்சவம் நாளை தொடக்கம்: ஸ்ரீஆண்டாள் பிரியாவிடை

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் ஜனவரி 7 (செவ்வாய்கிழமை) தொடங்குவதையொட்டி, திங்கள்கிழமை இரவு பிரியாவிடை நிகழ்ச்சி

News image
Updated On :6 ஜனவரி 2014, 2:41 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் ஜனவரி 7 (செவ்வாய்கிழமை) தொடங்குவதையொட்டி, திங்கள்கிழமை இரவு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் தொடங்குவதையொட்டி, ஸ்ரீவடபத்ரசயனரிடம் ஸ்ரீஆண்டாள் பிரியாவிடை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக ஸ்ரீஆண்டாளுக்கு இரவு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீஆண்டாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, மாடவீதி வழியாக பெரிய பெருமாள் சன்னதியை சேர்ந்தார். ஸ்ரீபெரிய பெருமாள் சன்னதியில் ஸ்ரீஆண்டாள் ஏகாந்தத் திருமஞ்சனம், ஸ்ரீஆண்டாள் கைத்தல சேவை முடிந்து ஸ்ரீபெரிய பெருமாள் மூலஸ்தானத்திற்கு சேருதல் நடைபெற்றது.

திருக்காப்பு நீக்கலுக்குப் பின்னர், அரையர் வியாக்கியானம், திருப்பாவை 1-ம் பாட்டு மற்ற பாட்டுகளும் சேவித்தல் நடைபெற்றது. ஸ்தலத்தார் உற்சவ வைபவம் வாசித்தல், பஞ்சாங்கம் வாசித்தல் பொதுஜன சேவைக்குப் பின்னர், ஸ்ரீஆண்டாள் புறப்பாடு நடைபெற்று, ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனமாகி மூலஸ்தானம் சேருதல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.