கொலை மிரட்டல் விடுத்த பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் கைது
மதுராந்தகத்தில் பெண்ணிடம் நைசாக பேசி,5 சவரன் நகைகளை வாங்கிக்கொணடு அதை திருப்பிக் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்த பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர்களை மதுராந்தகம் போலீசார்


மதுராந்தகத்தில் பெண்ணிடம் நைசாக பேசி,5 சவரன் நகைகளை வாங்கிக்கொணடு அதை திருப்பிக் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்த பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர்களை மதுராந்தகம் போலீசார் திங்கட்கிழமை கைது செய்தனர்.
மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவளம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். அவரது மனைவி மஞ்சுளா (வயது 23). இநநிலையில், சந்திரசேகரனின் அண்ணி கலையரசியுடன் மஞ்சுளா உறவுமுறையில் பகை இருந்தது. இந்த பகையை தீர்த்ததுக் கொள்ள ரெட்டைமங்களம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் அன்பழகன்(34), அன்பு(26), சண்முகம்(27) ஆகியோர் ஆலோசனையின்படி கலையரசி தனக்கு உடல்நிலை சரியில்லை, அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதால் பணமோ. நகையோ கொடுத்து உதவுமாறு கேட்டார்.
அதனால் இரக்கப்பட்ட மஞ்சுளா தனது பொன் வளையல், பொன்செயின் போன்ற 5 சவரன் நகைகளை கொடுத்து கடன் வாங்கிக் கொள் என்றார். அந்த நகைகளை மதுராந்தகம் தனியார் வங்கியில் அடகு வைத்து பணத்தை வாங்கிக் கொண்டு, கலையரசி தனது நணபர்களான அன்பழகன்(34), அன்பு(26), சண்முகம்(27) ஆகியோர் பங்கு போட்டுக் கொண்டனர். தனது நகை வாங்கி பல மாதங்கள் ஆகியும், திருப்பி தராததால் அதனை கலையரசியிடம் கேட்டார். அதற்கு கலையரசி பதில் சொல்லாமல், அவரது நண்பர்களான அன்பழகன்(34), அன்பு(26), சண்முகம்(27) ஆகியோர் நகையை கேட்டால் உன்னை கொலை செய்வேன் என மிரட்டினார்கள். இதனால் பயந்து போன மஞ்சுளா இதுப்பற்றி மதுராந்தகம் டி.எஸ்.பி ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார்.
டி.எஸ்.பி ராஜேந்திரன் இதுப்பற்றி விசாரித்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர். அதில் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் அன்பழகன்(34), அன்பு(26), சண்முகம்(27) ஆகியோர்களை மதுராந்தகம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...