ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தனி நபர் ஆக்கிரமிப்பில் குடிநீர் தொட்டி: நெல்லை மேயரிடம் பொதுமக்கள் பரபரப்பு புகார்

திருநெல்வேலி மாநகராட்சி 45 வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட சிறுமின்விசை குடிநீர் தொட்டியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக செவ்வாய்க்கிழமை

News image
Updated On :7 ஜனவரி 2014, 12:44 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாநகராட்சி 45 வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட சிறுமின்விசை குடிநீர் தொட்டியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேயரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மேயர் விஜிலாசத்யானந்த் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் பூ. ஜெகநாதன், மண்டலக் குழுத் தலைவர்கள் கே. மாதவராமானுஜம், எஸ்.கே. ஹைதர்அலி, அதிகாரிகள் அ. பெருமாள், து. கருப்பசாமி, அனிதா, சாந்தி, சாமுவேல்செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் வண்ணை கணேசன், பேபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடிநீர் தொட்டி ஆக்கிரமிப்பு: மாநகராட்சி சார்பில் 45 வது வார்டு, ஆண்டாள்புரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சிறுமின்விசை குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டு, 3 குடிநீர் இணைப்புகளும் வைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது தெரு ஓரமாக உள்ள இந்த குடிநீர் தொட்டியை அருகில் வசிப்பவர் ஆக்கிரமிப்பு செய்து தன்னுடைய வீட்டுக்கு அதில் இருந்து குடிநீரை பயன்படுத்தி வருகிறார்.

மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள், சிபிஐ (எம்.எல்) கட்சியின் கிளைச் செயலர் பி. சுப்பிரமணியன் மேயரிடம் கோரிக்கை மனு அளித்தனர். நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.