நெல்லையில் முறைகேடாக சமையல் எரிவாயு விற்பனை: 14 சிலிண்டர்கள் பறிமுதல்
திருநெல்வேலி நகரில் முறைகேடாக வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை, வர்த்தக சிலிண்டரில் அடைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. திடீர்சோதனையில்


திருநெல்வேலி நகரில் முறைகேடாக வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை, வர்த்தக சிலிண்டரில் அடைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. திடீர்சோதனையில் வருவாய்துறை அதிகாரிகள் 14 சிலிண்டர்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் சமையல் எரிவாயுவை முறைகேடாக விற்பனை செய்வதாக வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருநெல்வேலி பறக்கும்படை வட்டாட்சியர் எஸ். சொர்ணராஜ், குடிமை பொருள் வழங்கல் வட்டாட்சியர் எம். ஷேக்அப்துல்காதர் ஆகியோர் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் மானூரை சேர்ந்த குட்டிபாய் என்பவர், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து வர்த்தக சிலிண்டருக்கு சமையல் எரிவாயுவை டியூப் மூலம் அடைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அங்கிருந்து 8 வீட்டு உபயோக சிலிண்டர்களும், 3 வர்த்தக சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருநெல்வேலி நகரம் சாலியர் தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் இருந்து 3 வீட்டு உபயோக சிலிண்டர்களும், 9 ரேசன் பாமாயில் எண்ணெண்ணை பாக்கெட்டுகளும், 5 லிட்டர் மண்ணெண்ணையும் பறிமுதல் செய்யப்பட்டது. முறைகேடாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடு்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...