பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரத்தில் காசு வைத்து சூதாடிய 5 பேர் கைது: ரூ.10ஆயிரம் பறிமுதல்

சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது வடக்குமெயின்ரோடு பைசல் மஹால் பின்புறத்தில் அமர்ந்து காசு வைத்து

News image
Updated On :8 ஜனவரி 2014, 12:07 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் காசு வைத்து சூதாடிய 5 பேரை நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10ஆயிரம் தொகையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது வடக்குமெயின்ரோடு பைசல் மஹால் பின்புறத்தில் அமர்ந்து காசு வைத்து சூதாடிய கள்ளுக்கடை சந்து பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (32), மீனவர் காலனியைச் சேர்ந்த ஜோதி (33), முத்துமாணிக்க தெருவைச் சேர்ந்த பாலு (45), பாஸ்கரன் (34), வடக்குத்தெருவைச் சேர்ந்த பாலு (37) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 41 புள்ளித்தாள்களையும், ரொக்கம் ரூ.10ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.