பூச்சிமருந்து அடித்த விவசாயி மூச்சுதிணறலால் உயிரிழப்பு
புதுச்சத்திரம் அருகே உள்ள நொச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணன் (45). இவர் திங்கள்கிழமை தனது வயலில் கைதெளிப்பான் மூலம் பயிருக்கு பூச்சுமருந்து அடித்துள்ளார். அப்போது


சிதம்பரம் அருகே தனது வயலில் பூச்சிமருந்து அடித்த விவசாயி மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார்.
புதுச்சத்திரம் அருகே உள்ள நொச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணன் (45). இவர் திங்கள்கிழமை தனது வயலில் கைதெளிப்பான் மூலம் பயிருக்கு பூச்சுமருந்து அடித்துள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக பூச்சி மருந்தை சுவாசித்ததில் மூச்சுதிணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து விழுந்தார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தில் இருந்த விவசாயத் தொழிலாளர்கள் அவரை உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விவசாயி கண்ணன் புதன்கிழமை காலை இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி அழுதா கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...