யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பொங்கல் திருவிழா: சேலத்தில் இருந்து நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம், வெள்ளிக்கிழமை முதல் (ஜனவரி 10) நகர்ப்புற, புறநகர் சிறப்புப்

News image
Updated On :9 ஜனவரி 2014, 2:08 pm

தங்கராஜா

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம், வெள்ளிக்கிழமை முதல் (ஜனவரி 10) நகர்ப்புற, புறநகர் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.

 பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் மூலமாக பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல் போன்ற பகுதிகளுக்கும், பெங்களூரிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, குமுளி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 அதைப் போலவே சேலத்திலிருந்து மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூர், கடலூர், பெங்களூர், திருவண்ணாமலை, வேலூருக்கும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் கூடுதலாகவும், கூடுதல் நடைகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 மேற்கண்ட மாவட்டங்களின் நகரப் பகுதிகளில் அனைத்து நேரங்களிலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் நகரப் பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், சேலம் நகரில் ஜனவரி 13-ம் தேதி முதல் பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப இரவு முழுவதும் நகரப் பேருந்துகள் இயக்கப்படும்.

 எனவே, பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிர்த்து இனிய பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.