பொங்கல் பண்டிகை: 3 நாட்கள் மதுபான கடைகள், பார்களை மூட புதுவை அரசு உத்தரவு
வரும் 14-ஆம் தேதி மீலாது நபி, 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 17-ஆம் தேதி வள்ளலார் ஜோதி தரிசன தினமும் கொண்டாடப்பட உள்ளது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் மதுபானக் கடைகள், பார்களை வரும் மூன்று நாள்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கலால்துறை துணை ஆணையர் வின்சென்ட் ராயர் வெளியிட்ட அறிக்கை:
வரும் 14-ஆம் தேதி மீலாது நபி, 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 17-ஆம் தேதி வள்ளலார் ஜோதி தரிசன தினமும் கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு புதுவை கலால்துறை ஆணையரின் உத்தரவின்படி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் மதுபானக்கடைகள், பார்களில் மூன்று நாள்கள் மது விற்பனை தடை செய்யப்படுகிறது.
இதை மீறுவோர் மீது புதுச்சேரி கலால் சட்டவிதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராயர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...