அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் மாவட்டத்தில்  பொது விநியோக திட்டம் தொடர்பாககுறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களையும் வகையில் வருகிற 11-ம் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Updated On :9 ஜனவரி 2014, 10:09 am

விருதுநகர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களையும் வகையில் வருகிற 11-ம் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

    இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பொது விநியோக திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கும் வகையில், ஒவ்வொரு வட்டார பகுதியில் நடத்துவதற்கு நுகர்வோர் உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இக்கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

    இம்மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் வட்டத்தில் சொக்கலிங்காபுரம் கிராமத்தில் நடைபெற இருக்கிறது. இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர்-சுந்தரபாண்டியம், சிவகாசி-கீழத்தாயில்பட்டி, சாத்தூர்-கஞ்சம்பட்டி, அருப்புக்கோட்டை-மீனாட்சிபுரம், விருதுநகர்-குருமூர்த்திநாயக்கன்பட்டி, காரியாபட்டி-வளையங்குளம், திருச்சுழி-கேத்தநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 1 மணி வரையில் நடைபெற இருக்கிறது. அந்தந்த வட்டாரப் பகுதி கிராமங்களில் நடைபெற இருக்கிற கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமை வகிக்க இருக்கிறார்.

    எனவே பொதுவிநியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை கோரிக்கை மனுக்களாகவே, நேரடியாகவோ தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவும் இருக்கிறது. அதனால், கிராம மக்கள் தவறாமல் பங்கேற்கும் படி ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டு கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.