ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அம்பை அருகே ரேசன் கடைக்குள் புகுந்த வெள்ளம்:10 மூட்டை சர்க்கரை நீரில் கரைந்தது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே எலுமிச்சையாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளதால் கரையோரமாக இருந்த ரேசன் கடைக்கு வியாழக்கிழமை மழை நீர் புகுந்தது. இதில்

News image
Updated On :9 ஜனவரி 2014, 12:18 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே எலுமிச்சையாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளதால் கரையோரமாக இருந்த ரேசன் கடைக்கு வியாழக்கிழமை மழை நீர் புகுந்தது. இதில் 10 மூட்டை சர்க்கரை நீரில் கரைந்து ஓடியது. அரிசி, துவரம் பருப்பு, கோதுமை ஆகியன சேதமடைந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் பகுதியில்  விடிய விடிய மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அருவிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பலத்த மழையால் அம்பாசமுத்திரம் அருகே 4 கி.மீ தொலைவில் பொட்டல் கிராமத்தை அடுத்து செல்லும் எலுமிச்சை ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

வியாழக்கிழமை அதிகாலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூலச்சி பொட்டல் கிராமத்தை இணைக்கும் ஆற்றுப் பாலத்தில் 3 அடி உயரத்திற்கு வெள்ளநீர் சென்றது.
ஆற்றின் கரையோரமாக இருந்த ரேசன் கடைக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் கடையில் இருந்த அத்யாவசியப் பொருட்கள் நீரில் நனைந்து சேதமடைந்தன. கடையில் இருந்த 10 மூட்டை சர்க்கரை நீரில் கரைந்த ஓடியது. துவரம் பருப்பு, அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் நீரில் நனைந்து சேதமடைந்தது.

பொட்டல் ஊராட்சித் தலைவர் எஸ். முருகன், கூட்டுறவுத்துறை அதிகாரி பா. சங்கரன், கல்லிடைக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர். முத்துக்குமார், செயலர் க. மோகன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். கடையில் இருந்து வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள அத்யாவசியப் பொருட்கள் சேதமடைந்தாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.