பக்தர்கள் மீது தாக்குதல்: டிஜிபி மறுப்பு
சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் மீது நீலக்கல் என்ற இடத்தில் தமிழக காவல்துறையினர் தாக்கியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு தமிழக காவல்துறை இயக்குநர் ராமனுஜம் மறுப்பு


சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் மீது நீலக்கல் என்ற இடத்தில் தமிழக காவல்துறையினர் தாக்கியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு தமிழக காவல்துறை இயக்குநர் ராமனுஜம் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு பணிகளில் இருந்து வந்த தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் பக்தர்களிடம் கெடுபிடியுடன் நடந்து கொண்டதாக கூறி கேரள அரசு தமிழ்நநாடு காவல்துறையினரை திருப்பி அனுப்பிவிட்டதாக சில நாளேடுகளில் செய்தி வெளிவந்துள்ளது.
கேரள காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் வகையில் ஐயப்பன் கோவில் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்ட தமிழக காவல்துறையினர் தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு காவல்துறையினர் நிலக்கல் என்ற இடத்தில் பக்தர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு நாளேட்டில் வெளியாகியுள்ளது. தமிழ் நாடு காவல்துறையினர் நிலக்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்படவில்லை. தமிழ் நாடு காவல்துறையினர் பம்பா மற்றும் ஐயப்பன் சன்னிதானத்தில் மட்டுமே பணிகளில் இருந்து வருகிறார்கள்.
இது தொடர்பாக கேரள காவல்துறையினருடன் மேற்கொண்ட விசாரணையில், தமிழ்நாடு காவல்துறையினர் பணிபுரியும் விதம் கேரள காவல்துறையினருக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரியவந்துள்ளது.
கேரள அரசு ஒவ்வொரு வருடமும், சபரிமலை கோவில் நடை திறக்கும் காலங்களில் இருந்து வரும் பக்தர்கர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணிக்காக தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த குழு ஒன்றைக் கோரி வருகிறது. தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த சுமார் 90 காவலர்கள் கொண்ட நிறுமம் ஒன்று 01.12.2013 முதல் 19.01.2014 வரை இப்பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இப்பணிக்காக காவலர்கள் அனுப்பி வைக்கப்படும் முன்பு, அவர்களுக்கு பக்தர்களிடம் எவ்வாறு அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரை வழங்கப்பட்டது. அவர்கள் பாதுகாப்பு அலுவலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லத்தியை எடுத்துச் செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு தமிழக காவல்துறை இயக்குநர் ராமனுஜம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...