சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உலக நன்மையை கருதி அமெரிக்கர்கள் சார்பில் பொது தீட்சிதர்கள் ருத்ராபிஷேகம் மற்றும் ருத்ரயாகம் நடத்தினர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் கடந்த 10 ஆண்டுகளாக சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வந்து ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியை தரிச்சித்து சென்று வருகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட அமெரிக்கர்கள் குழுவினர் அமெரிக்க வாழ் இந்தியர் சுந்தரமூர்த்தி தலைமையில் 14 பெண்கள் உள்ளிட்ட 23 பேர் போகி பண்டிகையான திங்கள்கிழமை ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருகை தந்தனர்.
இந்திய கலாச்சாரம், குறிப்பாக தமிழக கலாச்சாரப்படி ஆண்கள் பட்டுவேட்டியும், பெண்கள் பட்டுப்புடவையும் கட்டிக்கொண்டு கோயிலுக்கு வந்தை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். பின்னர் அமெரிக்கர்கள் சார்பில் உலக நன்மை கருதி நடைபெற்ற ருத்ராபிஷேகம், மற்றும் ருத்ரயாகத்தை பொதுதீட்சிதர்கள் நடத்தி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் அமெரிக்கர்கள் பயபக்தியுடன் பங்கேற்று தரிசித்து வழிபட்டனர். மேலும் சித்சபை முன்பு அமெரிக்கர்கள் சிலர் தமிழக கலாச்சாரப்படி காதுகுத்திக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


