காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

ஒரே மோட்டார் சைக்கிளில் 6 பேர் பயணம்: விபத்தில் 4 பேர் காயம்

ஒரே மோட்டார் சைக்கிளில் 6 பயணம் மேற்கொண்ட போது எதிரே வந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 4 பேர் காயமடைந்தனர்.

Updated On :15 ஜனவரி 2014, 10:35 am

ஒரே மோட்டார் சைக்கிளில் 6 பயணம் மேற்கொண்ட போது எதிரே வந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 4 பேர் காயமடைந்தனர்.

 சிவகங்கை நகர் காவல் சரகம் ஈசனியைச் சேர்ந்தவர் முருகன்(40). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சூர்யா(10), சிவராமன்(12), காசி(40) மேலும் இருவர் என மொத்தம் 6 பேரை ஒரு மோட்டார் சைக்கிளில் இலந்தக்குடிக்கு புதன்கிழமை சாமி கும்பிடுவதற்காக அழைத்து வந்தார். திருப்பத்தூர் சாலை காஞ்சிரங்காலை அடுத்த இலந்தக்குடி கண்மாய் திருப்பத்தில் மோட்டார் சைக்கிள் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து எதிரை சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் மீது மோதியது.

 இதில் முருகன், சூர்யா, சிவராமன், காசி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்திலிருந்து காயமடைந்த மற்ற இருவரும் அங்கிருந்து தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த 4 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த முருகன் குடிபோதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

 இது குறித்து வேனை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த ஜமாலுதீன் மகன் அன்வர்சதக்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.