குப்பை கொட்டுவதில் தகராறு: 5 பேர் மீது வழக்கு பதிவு
உளுந்தூர்பேட்டை அருகே குன்னத்தூர் கிராமத்தில் குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் திருநாவலூர் போலீஸார் 5 பேர் மீது வழக்குப் பதிவு


உளுந்தூர்பேட்டை அருகே குன்னத்தூர் கிராமத்தில் குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் திருநாவலூர் போலீஸார் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(23) விவசாயி. அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன்(26). இவர்கள் இருவருக்குமிடையே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் பாலமுருகன் உறவினர்கள் அரிகோவிந்தன், அண்ணாமலை, அய்யனார், ஆறுமுகம் ஆகிய 5 பேரும் குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து, உதைத்து கொலைமிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து முருகனின் புகாரின்பேரில் திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சியப்பன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து பாலமுருகன் உட்பட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...