நெல்லையில் திரையரங்கு வளாகத்தில் பயங்கர தீ
திருநெல்வேலியில் அமைந்துள்ள பூர்ணகலா திரையரங்கம் அருகில் உள்ள வணிக வளாகங்களில் இன்று முற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.


திருநெல்வேலியில் அமைந்துள்ள பூர்ணகலா திரையரங்கம் அருகில் உள்ள வணிக வளாகங்களில் இன்று முற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பூர்ணகலா திரையரங்கம் உள்ளது. இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதில், புகைப்படங்களுக்க பிரேம், சட்டங்களை விற்பனை செய்யும் மொத்தக் கடையும், ஜெராக்ஸ், பிரிண்டிங் தொர்பான கடைகளும் உள்ளன.
பிரேம் கடையின் கிடங்கில் இன்று காலை 11 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ வேகமாக பக்கத்து கடைகளுக்கும் பரவியது. தீ விபத்து குறித்து அறிந்ததும் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர். கடைகளுக்குப் பரவிய தீ பயங்கரமாக எரிந்தது.
இதனால் படத்தை நிறுத்திவிட்டு, திரையரங்கம் மீது தண்ணீர் பாய்ச்சும் பணி நடந்தது. இதற்கிடையே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாளையங்கோட்டை, பேட்டை பகுதிகளில் இருந்து 3 வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன.
சம்பவம் நடந்த பகுதிக்கு மிக அருகே ஈரடக்கு பாலம் உள்ளது. தீ விபத்துக் காரணமாக, இந்த ஈரடக்கு பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல், நின்றது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை, போக்குவரத்துக் காவல்துறையினர் விரைந்து வந்து சரி செய்தனர்.
இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பரப்பாக காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...