காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

எஸ்.எஸ்.ஐ.யைக் கொல்ல முயன்றதாக ஒருவர் கைது

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம் கண்டிபட்டியில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வெங்கட சுப்ரமணியன் என்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் பாதுகாப்பு பணியில்

Updated On :19 ஜனவரி 2014, 12:16 pm

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) மீது கல்வீசி அவரைக் கொலை செய்ய முயன்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம் கண்டிபட்டியில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வெங்கட சுப்ரமணியன் என்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஜல்லிக்கட்டினைக் காண வந்த இலுப்பக்குடியைச் சேர்ந்த செல்லையா(31) என்பவர் வெங்கட சுப்ரமணியன் மீது கல்வீசினாராம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மதகுபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் செல்லையாவை போலீஸார் கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காவலில் வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.