பள்ளியில் படிக்கும் மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் கைவிட்டாலும், தமிழக முதல்வர் கைவிடமாட்டார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.
ஆம்பூர் அருகே சோலூர் கிராமத்தில் சனிக்கிழமை நடந்த விழாவில் 1006 பயனாளிகளுக்கு விலையில்லா பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி கே.சி. வீரமணி மேலும் பேசியது, தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்து மக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் மட்டும் தான் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. தாய் வீட்டு சீதனமாக வழங்கப்படும் பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை நல்ல தரத்துடன் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார். அதனை பாதுகாப்பாக வைத்து பயன்படுத்த வேண்டுமென அவர் கூறினார்.
விழாவில் ஆம்பூர் எம்எல்ஏ அ. அஸ்லம் பாஷா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் ஆர். பாலசுப்பிரமணி, விவசாய பிரிவு செயலர் ஆர். வெங்கடேசன், இளைஞர் அணி செயலர் ஜி.ஏ. டில்லிபாபு, கட்சியின் மாதனூர் ஒன்றிய செயலர் ஜோதிராமலிங்கராஜா, ஆம்பூர் தொகுதி செயலர் அகரம்சேரி ஆர். வெங்கடேசன், வட்டாட்சியர் கஸ்தூரி, ஊராட்சி மன்ற தலைவர் ஞானமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

