4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மதுராந்தகம் அருகே கோமாரி நோய் பாதிப்பு 17 மாடுகளுக்கு தீவிர சிகிச்சை

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தண்டரை கிராமத்தில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு, கால்நடைபராமரிப்புத்துறையின் மூலம் சிறப்பு முகாமில் தீவிர சிகிச்சையை

News image
Updated On :20 ஜனவரி 2014, 12:52 pm

குமார்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தண்டரை கிராமத்தில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு, கால்நடைபராமரிப்புத்துறையின் மூலம் சிறப்பு முகாமில் தீவிர சிகிச்சையை  அளித்து வருகின்றனர்.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், தண்டரை கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாடுகளுக்கு வாயில் நுரை தள்ளல், காலில் புண் போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து, தலைமையிடத்து இணை இயக்குநர் டாக்டர் அனந்தபத்மநாபன் தலைமையில் 7 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு நேரில் வந்து, நோய் தடுப்பு முன்னேற்பாடுகளை செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று மாடுகளுக்கு ஏற்பட்ட புண்களுக்கு, பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல், தடுப்பு ஊசிகள், அளிக்கப்பட்டது. கால்நடைபராமரிப்புத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார். கால்நடைபராமரிப்புத்துறை மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால், ஞாயிற்றுகிழமை பாதிக்கப்பட்ட 5 மாடுகள் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், மீதி உள்ள 12 மாடுகளுக்கு திங்கட்கிழமை மருத்துவர்கள் அளித்து வந்த சிகிச்சையால் நோயின் தீவிரநிலையில் இருந்து சற்று குணமாகி வருகின்றன.

 இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை உயர் அதிகாரி கூறுகையில், இப்பகுதியில் உள்ள மாடுகளை வெளியிடங்களில் இருந்து வாங்கி வந்துள்ளதுள்ளனர். அங்கிருந்து நோய் கிருமிகள் தொற்றி இங்குள்ள மாடுகளுக்கு பரவியுள்ளது. எத்தகைய மாடுகளும் இறக்கவில்லை. தற்சமயம் முற்றிலும் நோய் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள மாடுகள் ஒரிரு நாளில், முழுமையாக குணமடைந்துவிடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.