ஊழலுக்கான ஆதராத்தை காட்டுங்கள்: ஆர்.கே.சிங், ஆம் ஆத்மிக்கு ஷிண்டே சவால்
தில்லி போலீஸாரின் ஏராளமான பணி மாறுதல்கள் ஷிண்டேவின் பரிந்துரையின் பேரிலேயே வழங்கப்பட்டு வருகிறது. இதில் லஞ்சம் பெறப்படுவதாக தில்லி போலீஸார் குற்றம் சாட்டுகிறார்கள். என்று


தில்லி போலீஸாரின் ஏராளமான பணி மாறுதல்கள் ஷிண்டேவின் பரிந்துரையின் பேரிலேயே வழங்கப்பட்டு வருகிறது. இதில் லஞ்சம் பெறப்படுவதாக தில்லி போலீஸார் குற்றம் சாட்டுகிறார்கள். என்று சமீபத்தில் பாஜக.வில் இணைந்த முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கூறியிருந்தார்.
மேலும் ஆம். ஆத்மி கட்சியும், ஷிண்டே மீது காவல் துறை விவகாரம் குறித்து புகார் கூறியிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, எனது மீதான புகார் குறித்து யாராவது ஒருவர், ஏனேனும் ஒரு ஆதாரத்தை, ஒரு கடிதத்தையோக காட்டுங்கள் நான் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள தயாராகவே உள்ளேன் என்றார்.
ஆம் ஆத்மி போராட்டம் குறீத்து பேசிய ஷிண்டே குழப்பத்தை ஏற்படுத்தி, போலீசாரின் கட்டுப்பாட்டை பெற ஆம் ஆத்மி கட்சி முயற்சிப்பதாக மறைமுகமாக குற்றம்சாட்டினார். மேலும், காவல்துறையினர் மீது கெஜ்ரிவால் கொடுத்த புகார் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...