பெண்கள் அதிகாரமிக்கவர்களாக மாறினால், அவர்களால் எதையும் சாதிக்க முடியும்: ராகுல் காந்தி
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அனைத்திந்திய மகிலா காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மகளிர் அணி கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது


மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அனைத்திந்திய மகிலா காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மகளிர் அணி கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது
இங்குள்ள பெண்களுக்கு நிறைய திறமைகள் உள்ளது. உங்கள் பேச்சை கவனிப்பதற்காக இங்கு வந்துள்ளேன்.என்னுடைய சிறிய வயதில் எனது பாட்டி இந்திராதான் எங்கள் வீட்டு நிர்வாகத்தை பார்த்தார். ஆண்களுக்கு நிகராக பெண்களை சமமாக நடத்த வேண்டும் பெண்களுக்கு யாருடைய பாதுகாப்பும் அவசியமில்லை, அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமை மற்றும் இடத்தை கொடுத்தாக வேண்டும்.
நான் எனது பாட்டி மற்றும் அம்மாவிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதேபோல் அமேதி தொகுதியில் உள்ள பெண்களிடம் ஏராளமானவற்றை கற்றுக்கொண்டேன்.அதில் பெண்கள் அதிகாரமிக்கவர்களாக மாறினால், அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
வன்முறை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்பை உருவாக்க கூடியது. வன்முறையை எதிர்த்து போராடவேண்டும். அதேநேரத்தில் வன்முறை மனப்பாண்மையை நாம் கட்டாயமாக மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணும் இந்தியாவின் சொத்து. பல்வேறு வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தேர்தல் அறிக்கையில் இணைக்க திட்டமிட்டுள்ளேன். பல்வேறு கடும் போராட்டத்திற்கு பின் உணவு பாதுகாப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளோம். இவ்வாறு கூறினார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...