தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆம் ஆத்மி கட்சியினர் மீது போலீஸார் தடியடி: தில்லியில் பதற்றம்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கடமை தவறிய காவல்துறை அதிகாரிகள் நான்கு பேரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணா போராட்டம்

News image
Updated On :21 ஜனவரி 2014, 1:20 pm

வேல்முருகன்

 தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கடமை தவறிய காவல்துறை அதிகாரிகள் நான்கு பேரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்திவருகிறார். நேற்று போராட்டத்தை தொடங்கிய அவர் 10 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இவருடைய போராட்டத்தால் தில்லியின் கடும் பதற்றம் நிலவுகிறது. கேஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில்  ஆம் ஆத்மி கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டர்களை  தகர்த்த ஆம் ஆத்மி கட்சியனர்  போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 19 பேர் காயமடைந்தனர்.  தர்ணா போராட்டம் நடைபெறும் ரயில் பவன் முன்பாக ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

தர்ணா போராட்டம் காரணமாக புது தில்லியின்  முக்கிய வீதிகள் மூடப்பட்டுள்ளன. 4 மெட்ரோ ரயில் நிலையங்கள்  மூடப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.