போராட்டம் தொடரும்- கேஜ்ரிவால்; பொறுத்துக்கொள்ள முடியாது- ஷிண்டே
புது தில்லி ரயில்பவன் முன்பாக இரண்டாவது நாளாக தர்ணா போராட்டம் நடத்திவரும் கேஜ்ரிவால், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை


கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
புது தில்லி ரயில்பவன் முன்பாக இரண்டாவது நாளாக தர்ணா போராட்டம் நடத்திவரும் கேஜ்ரிவால், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார்.
பொறுத்துக்கொள்ள முடியாது
இந்நிலையில் கேஜ்ரிவால் கூறும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார்ஷிண்டே தெரிவித்துள்ளார். மேலும் குடியரசு தினவிழாவை சீர்குலைக்க முயற்சிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மணீஸ் சிசோடியா குற்றச்சாட்டு
இதனிடையே தர்ணா போராட்டத்தில் பிற கட்சியினர் மற்றும் விஷமிகள் ஊடுருவி வன்முறையை தூண்டி பேராட்டத்தை சிதைக்கமுயல்வதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரும் அம்மாநில அமைச்சருமான மணீஸ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...