இலங்கையில் தமிழர்களை தண்டிக்கும் போக்கு தொடர்கிறது: இங்கிலாந்து கவலை
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ள இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம், இதுதொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கையில்


இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ள இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம், இதுதொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கையில் கடந்த 3 மாதங்களில் மனித உரிமை பாதுகாப்பு விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற போது இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்திருப்பதாகவும், மனித உரிமை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க வடக்கு மாகாண மக்களுக்கு ராணுவம் அனுமதி வழங்கவில்லை என்றும், வடக்கு மாகாணத்திற்குச் சென்ற சேனல் 4 குழுவினருக்கு எதிராக போராடுமாறு ஒரு பிரிவினரை அரசே தூண்டிவிட்டதாகவும் இங்கிலாந்து அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் தமிழ் மாணவர்கள் 5 பேரைக் கொன்ற சிறப்புப் பாதுகாப்புப் படை வீரர்கள் 12 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டதை சுட்டிகாட்டியுள்ள இங்கிலாந்து அரசு, இலங்கையில் தமிழர்களை தண்டிக்கும் போக்கு தொடர்வதாகவும் கவலை தெரிவித்துள்ளது. கடந்த 3 மாதத்தில், இலங்கையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பலர் கொல்லப்பட்டதாகவும், இரண்டு கடத்தல் சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் இங்கிலாந்து அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...