தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

இந்தியா- நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது.. டாஸ் வென்ற இந்தியா நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது

News image
Updated On :22 ஜனவரி 2014, 9:53 am

வேல்முருகன்

இந்தியா- நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது.. டாஸ் வென்ற இந்தியா, நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 77 ரன்களும், டெய்லர் 57 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகளை வீழத்தினார்.

மழைக்காரணமாக டக்வர்த் லீவிதிப்படி இந்திய அணிக்கு 42ஓவர்களில் 293 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 41.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் மட்டுமே எடுத்தது. மீதமுளள  3 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் இந்தியா அணி டக்வர்த் லீ விதிப்படி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது  இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கோலி  78 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.