தமிழகத்தில் உள்ள தேசிய தமிழர் கட்சி, ஆம் ஆத்மி கட்சியுடன் இணைப்பு!
கடந்த ஜன.18,19 தேதிகளில் சென்னை வளசரவாக்கம் ஜே.எம்.ஜே திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி மாநில ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினாசாமி,


தமிழகத்தில் உள்ள தேசிய தமிழர் கட்சி, ஆம் ஆத்மி கட்சியுடன் இணைக்கப்பட்டது.
கடந்த ஜன.18,19 தேதிகளில் சென்னை வளசரவாக்கம் ஜே.எம்.ஜே திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி மாநில ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினாசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் லெனின், பொருளாளர் டாக்டர் ஆனந்த் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்ட தேசிய தமிழர் கட்சி, ஆம் ஆத்மி கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேசிய தமிழர் கட்சி மாநிலத் தலைவர் அ.ச.லோகநாதன், செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜசேகர், மணிகண்டன், நூர்பாஷா, ஜானகிராமன் உள்ளிட்டோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...