இளம் வழக்குரைஞர்களுக்கு பயிற்சி அவசியம்: உயர்நீதிமன்ற நீதிபதி கே.கே.சசிதரன்
தமிழ்நாடு நீதித்துறை அகாதெமி சார்பில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளம் வழக்குரைஞர்களுக்கான இருநாள் பயிற்சி தொடக்க விழா சிதம்பரம்


இளம் வழக்குரைஞர்களுக்கு பயிற்சி அவசியம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.கே.சசிதரன் தெரிவித்தார்.
தமிழ்நாடு நீதித்துறை அகாதெமி சார்பில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளம் வழக்குரைஞர்களுக்கான இருநாள் பயிற்சி தொடக்க விழா சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஹைடெக் பார்க் கான்பிரன்ஸ் ஹாலில் சனிக்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவில் கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.கே.சசிதரன் முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசியது: இளம் வழக்குரைஞர்களுக்கு இப்பயிற்சி மிகவும் அவசியமானது. தற்போது 5 வருட அனுபவமுள்ள வழக்குரைஞர்கள், தங்களுக்கு கீழ் 2 அல்லது 3 ஜூனியர் வழக்குரைஞர்களை வைத்துக் கொள்கின்றனர். இக் காலக்கட்டத்தில் 10 ஆண்டுகளுக்குள் உள்ள இளம் வழக்குரைஞர்களுக்கான இப்பயிற்சி மிகவும் அவசியமானதாகும்.
நீதித்துறை அகாதெமி மூலம் நீதிபதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேவேளையில் நீதிபரிபாலனத்தின் எதிர்புறத்தில் உள்ள வழக்குரைஞர்களுக்கும் பயிற்சி கொடுப்பது அவசியமும், கட்டாயமும் ஆகும். எனவேதான் இப்பயிற்சியை நாங்கள் தொடங்கியுள்ளோம். தற்போது 3 மையங்களில் வழக்குரைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் பலனை அறிந்து 6 மாதங்களுக்கு பிறகு மேலும் 3 மையங்களில் பயிற்சி அளிக்கப்படும் என நீதிபதி கே.கே.சசிதரன் தெரிவித்தார்.
விழாவில் கடலூர் மாவட்ட கூடுதல் நிதிபதி எஸ்.சுபாதேவி, தலைமை நடுவர் நீதிபதி கிருஷ்டோபர், முதன்மை சார்பு நீதிபதி செந்தில்குமார், கூடுதல் சார்பு நீதிபதி தாண்டவன், சிதம்பரம் சார்பு நீதிபதி ராதிகா, விருத்தாசலம் கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்நாதன் உள்ளிட்டார் பங்கேற்றனர்.
பயிற்சி முகாமில் மதுரை வழக்குரைஞர் எஸ்.மீனாட்சிசுந்தரம், திருவாரூர் வழக்குரைஞர் என்.சுவாமிநாதன் ஆகியோர் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் குறித்து வழக்குரைஞர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...