சிதம்பரம் அருகே விநோதமான கன்னிபூஜை விழா!
சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் இளம்பெண்களை வெளிக் கொணரும் வகையில் தொன்று தொட்டு கொண்டாடப்படும் கன்னிபூஜை திருவிழா சனிக்கிழமை


சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் இளம்பெண்களை வெளிக் கொணரும் வகையில் தொன்று தொட்டு கொண்டாடப்படும் கன்னிபூஜை திருவிழா சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
முற்காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தததால், திருமண வயது பெண்களை வெளிக் கொணருவதற்காக சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் கன்னிபூஜை திருவிழா தொன்று, தொட்டு ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு அடுத்து 10வது நாளாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.
சி.முட்லூர் கிராமத்தில் உள்ள 13 தெருக்களிலும் திருமண வயது வந்த இளம்பெண்கள் களிமன்னால் ஆன 20-க்கும் மேற்பட்ட சாமிசிலைகளை செய்து வைத்து, பூஜை செய்து மாலை வரை ஆடல், பாடல், கும்மி ஆகியவற்றுடன் கொண்டாடினர். அதேபோன்று இளைஞர்கள் சிலம்பாட்டம், சுருள்கத்தி வீசுதல் உள்ளிட்ட வீரவிளையாட்டுகளை விளையாடி தங்களது திறமைகளை காண்பித்தனர். பின்னர் மாலை இளம்பெண்கள் செய்து வைத்து பூஜை செய்த களிமண்ணால் ஆன சிலைகளை இளைஞர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று அருகே உள்ள வெள்ளாற்றில் கரைத்து கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...