வேட்மனு தாக்கல் செய்தற்கான 8 நாள்களில் 4 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 காலை 11 மணிக்கு தொடங்கி ஏப். 6 பிற்பகல் 3 மணியுடன் முடிவடைகிறது.
இதில் மார்ச் 31, ஏப். 1, 3, 5 ஆகிய தேதிகள் அரசு விடுமுறை நாள்கள் என்பதால் மார்ச் 30, ஏப். 2, 4, 6 ஆகிய 4 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
”2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடும் நாள் 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் 06.04.2026 (திங்கட்கிழமை) வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
1881ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ், பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை), 01.04.2026 (புதன்கிழமை), 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik has said that nominations can be filed only for 4 days out of the 8 days allowed for filing nominations.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்த மீனாட்சி நடராஜனின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
உதயநிதி வேட்புமனு ஏற்பு: ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி!

தோ்தல் நடைமுறைகள் நிறைவு: காப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




