இந்நிலையில் போலீஸார் அனுமதி மறுத்ததை மீறி விவேகானந்தர் 150-வது பிறந்தநாள் விழா ஆசிரியர்-மாணவர் சைக்கிள் எழுச்சி பேரணி கீழவீதி-வடக்குவீதி சந்திப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டது. பேரணியை உதவிஆட்சியர் மா.அரவிந்த் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் தில்லைசீனு, முதல்வர் ஜி.சக்தி, சிறப்பு பள்ளி முதல்வர் மீனாட்சி, பள்ளிக் கல்விக்குழு ஆலோசகர் டி.சந்திரசேகர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். பேரணியில் விவகானந்தரின் உருவப்படங்கள் மற்றும் பொன்மொழிகள் அடங்கி பதாதைகளுடன் கிராமங்களுக்கு சென்று விவேகானந்தரின் கருத்துகள் மற்றும் பெருமைகளை துண்டு பிரசுரங்கள் வழங்கியும், வீடியோ காட்சி மற்றும் பாடல்கள் வாயிலாக எடுத்துரைத்தனர்.