சுவாமி சகஜானந்தா 124-வது பிறந்தநாள் விழா ஊர்வலம்
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து சுவாமி சகஜானந்தாவின் அலங்கரிக்கப்பட்ட உருவப்பட ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் சபாநாயகர்தெரு


சிதம்பரத்தில் நந்தனார் கல்வி நிறுவனங்களை நிறுவிய சுவாமி சகஜானந்தா 124-வது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து சுவாமி சகஜானந்தாவின் அலங்கரிக்கப்பட்ட உருவப்பட ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் சபாநாயகர்தெரு வழியாக நான்குவீதிகள் வலம் வந்து மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் தலைமை ஆசிரியர் பால்ராஜ், நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் டி.ஜெயராமன் மற்றும் விடுதி காப்பாளர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், சகஜானந்தா நற்பணி மன்றத்தினர் பங்கேற்றனர். பின்னர் மாலை பள்ளி வளாகத்தில் பிறந்தநாள் சிறப்பு ஆராதனைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...